சத்தீஸ்கர் காட்டுக்குள் நடந்த என்கவுன்டரால் பரபரப்பு Anti Naxal Operation at Chhattisgarh | Dantew
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நக்சல் அமைப்பினரை ஒடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. அரசின் நலத்திட்டங்களை எதிர்க்கும் நக்சலைட்கள், அப்பாவி பொதுமக்களை மிரட்டியும் மூளை சலவை செய்தும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பஸ்தர், நாராயண்பூர், தன்தேவாடா, பீஜபூர், ஜகதல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காடு, மலை பிரதேசங்களில் பதுங்கி வாழும் நக்சலைட்கள், அப்பகுதியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளனர். அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நுாற்றுக்கணக்கான நக்லைட்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். ஆனால் அரசின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஆயுதத்தை கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபடும் நக்சலைட்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடி படை போலீசார், சிஆர்பிஎப் கூட்டு குழுவின் நடவடிக்கையின் போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சில நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.