/ தினமலர் டிவி
/ பொது
/ நக்சல் வேட்டையில் புதிய அத்தியாயம்: அமித் ஷா பாராட்டு | Anti Naxal | Operation Black forest
நக்சல் வேட்டையில் புதிய அத்தியாயம்: அமித் ஷா பாராட்டு | Anti Naxal | Operation Black forest
சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல்களை வேட்டையாடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சிஆர்பிஎப் மற்றும் மாநில அதிரடிப்படை போலீசார் மலை, வனப்பகுதியில் களம் இறங்கியுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே சத்தீஸ்கரில் நுாற்றுக்கணக்கான நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசிடம் சரண் அடைந்தனர். அவர்களின் புதிய வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. நக்சல் பாதித்த பகுதிகள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதால், அங்கு அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மே 14, 2025