உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலைவர்களும் காலி Anti Naxal Operation at Chhattisgarh | 26 Naxals

சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலைவர்களும் காலி Anti Naxal Operation at Chhattisgarh | 26 Naxals

சத்தீஸ்கரின் தென் பகுதியில் அமைந்துள்ள பஸ்தர், பீஜப்பூர், நாராயண்பூர், தந்தேவாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனம் மற்றும் மலைப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சல்களை பிடிக்க, மத்திய - மாநில அரசுகளின் கூட்டு அதிரடிப்படை களம் இறங்கியுள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதல் ஆயிரக்கணக்கான நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தனர். அரசின் அழைப்பை ஏற்காமல், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தும் நக்சல் அமைப்பினரை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Operation Black Forest மூலம் சமீபத்தில் நடந்த நக்சல் வேட்டையில், அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், நாராயண்பூரில் அடர்ந்த வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். துணை ராணுவப்படை, அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் நக்சலைட்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் அந்த அமைப்பை வழிநடத்திய தலைவர்கள். அவர்களின் தலைக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் கூறினர். நாராயண்பூரில் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நக்சல்களை வேட்டையாடிய வீரர்களுக்கு துணை முதல்வர் அருண் சாவ், சட்டசபை சபாநாயகர் ரமண் சிங் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை