உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்: அனுரா anura | srilanka election| sri lanka president

புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்: அனுரா anura | srilanka election| sri lanka president

இலங்கையில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமதாச, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரா குமார திசநாயக்க ஆகியோரிடையே தான் போட்டி நிலவியது. 22 தேர்தல் மாவட்டங்களில் 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஆனால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால், அதிபர் தேர்தலில் முதல் முறையாக விருப்ப ஓட்டுகள் எண்ணப்பட்டன. இது, வாக்காளர்கள் தங்களின் 2வது விருப்ப வேட்பாளருக்கு அளித்த ஓட்டுகள். முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த அனுரா மற்றும் சஜித் ஆகியோருக்கு ஆதரவாக விழுந்த விருப்ப ஓட்டுகள் எண்ணப்பட்டு, ஏற்கனவே அவர்கள் பெற்ற ஓட்டுகளுடன் சேர்த்து கணக்கிடப்படும். அதன்படி, 2வது சுற்றில் அனுரா குமார திசநாயக்க அதிகபட்சமாக 42.31 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் சஜித் பிரமதாச 32.76 சதவீத ஓட்டுகள் பெற்றார். அனுரா வெற்றியின் மூலம், இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இடதுசாரி கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை