பிரிந்தாலும் நண்பர்களாக இருப்போம்: மோஹினி தே
கணவரை பிரிவதாக ரஹ்மானின் பெண் கிட்டாரிஸ்ட் அறிவி கணவரை பிரிந்தார் ஏஆர் ரஹ்மான் இசை குழுவின் பெண் கிட்டாரிஸ்ட்டும் விவாகரத்து இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் - மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், ரஹ்மானின் இசை குழுவை சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே, கணவர் மார்க் ஹார்ட்சச்-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார். அவரது இன்ஸ்டா பதிவில், இது நாங்கள் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. இருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகள் இருக்கும்போது, பரஸ்பர ஒப்புதலுடன் பிரிவது சிறந்தவழி என முடிவு செய்துள்ளோம். சிறந்த நண்பர்களாக இருப்போம். இருவரும் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்போம். அதை பெருமையாக கருதுகிறோம் என கூறியுள்ளார்.
நவ 20, 2024