/ தினமலர் டிவி
/ பொது
/ ஆற்றின் நடுவே 7 பேர்: அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Ariyalur | Ariyalur River | Flood
ஆற்றின் நடுவே 7 பேர்: அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Ariyalur | Ariyalur River | Flood
அரியலூர் பெரிய திருக்கோணம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ், வயது 50. அங்கே மருதையாற்றின் நடுவே உள்ள கருவேல மரங்களை வெட்டும் வேலை செய்கிறார். வெட்டிய கருவேல மரங்களை காயவைத்து அதனை எரித்து கரியாக்கி விற்பது வழக்கம். இதற்காக செல்வராஜ் மனைவி மஞ்சுளா, மகன் கோபால், மருமகள் ஐஸ்வர்யா, இவர்களுடைய குழந்தைகள் 3 பேர் ஆற்றின் கரையோரம் குடிசை அமைத்து தங்கி உள்ளனர். அரியலூரில் கடந்த இரு நாட்களாக பெய்த கன மழையினால் மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
டிச 13, 2024