தேர்தலை சீர்குலைக்க சதி ; காஷ்மீரில் உச்சகட்ட பதட்டம் | J-K polls | arms seized | 10 feet cave |
பயங்கரவாதிகளின் 10 அடி பதுங்கு குழி! அள்ள அள்ள பயங்கர ஆயுதங்கள் ஜம்மு காஷ்மீரில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த சூழலில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தன. எல்லையில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக, சிறப்பு தேர்தல் அதிகாரி மற்றும் புலனாய்வு குழுக்கள் எச்சரித்தனர். போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினர் இன்ச் இன்ச்சாக சல்லடை போட்டனர். குப்வாரா மாவட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு மரத்தின் அருகே 10 அடி பெரிய குகையை கண்டுபிடித்தனர். உள்ளே சென்ற போது அது பயங்கரவாதிகளின் பதுங்கு குழி என்பது தெரிந்தது. வெடிமருந்து, கையெறி குண்டுகள், ஷார்ட் கன், ஏகே ரக தோட்டாக்கள் என ஒரு ஆயுத குடோனே உள்ளே இருந்தது. அனைத்தையும் நம் வீரர்கள் பரிமுதல் செய்து சதி திட்டத்தை முறியடித்தனர். உள்ளே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் யார்? அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த நோக்கம் என்ன என விசாரணை நீளுகிறது.