/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் கிளைமாக்ஸ் எப்போது? | Armstrong | Armstrong Case | TNpolice | Sambo Senthil
ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் கிளைமாக்ஸ் எப்போது? | Armstrong | Armstrong Case | TNpolice | Sambo Senthil
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரே எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஆம்ஸ்ட்ராங் கூட்டாளி பாம் சரவணனை தீர்த்துக்கட்ட, சீசிங் ராஜா, சம்போ செந்தில் என்ற இரு ரவுடிகள் தருணம் பார்த்து வருவதால் அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார், ஆந்திரா சென்றுள்ளனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டவர், சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்த பாம் சரவணன். வெடிகுண்டு வீசுவதில் இவர் கெட்டிக்காரர் என்பதால் பெயருக்கு முன்னால் பாம் சேர்த்து அழைக்கப்படுகிறார்.
ஜூலை 22, 2024