உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சதியில் DMK ADMK BJP புள்ளிகள் பங்கு இதுதான் | Armstrong case | Malarkodi sambo senthil

ஆம்ஸ்ட்ராங் சதியில் DMK ADMK BJP புள்ளிகள் பங்கு இதுதான் | Armstrong case | Malarkodi sambo senthil

தமிழகத்தை பதற வைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை, இந்திய அரசியல் களத்திலும் எதிரொலித்தது. பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியானது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 8 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலுவும், மைத்துனர் வக்கீல் அருளும் முக்கியமானவர்கள். இது அரசியல் கொலையாக இருக்கலாம் என்றும், சரண் அடைந்த 8 பேரும் உண்மை கொலையாளிகள் தானா என்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்கட்சியினர் சந்தேகம் கிளப்பினர். 8 பேரும் ஸ்பாட்டுக்கு வந்தது முதல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்தது வரை நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். ஒவ்வொரு நபரின் அடையாளத்தையும் காட்டி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அடுத்த திருப்பமாக போலீஸ் கஸ்டடியில் இருந்த முக்கிய கொலையாளி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவர் ஆற்காடு சுரேஷ் மைத்துனர் அருளுக்கு மிகவும் நெருக்கமானவர். அருள் திமுகவில் இருந்ததால் இந்த என்கவுன்டர் குறித்து மீண்டும் கட்சிகள் சந்தேகம் கிளப்பின. சரண் அடைந்தவரை எதற்காக என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பின. இப்படியொரு சூழலில் தான் திமுக, அதிமுக, பாஜ, தமாக என கட்சி பாகுபாடு இன்றி அரசியல் புள்ளிகளுக்கு இருக்கும் தொடர்பை போலீஸ் அம்பலப்படுத்தியது. அனைவரும் அந்தந்த கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இப்போது ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் மொத்த கட்சிகளும் கப்சிப் ஆகிவிட்டன. வழக்கு புதிய திசையில் நகர்வதால் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க துவங்கி விட்டன. ஆம்ஸ்ட்ராங் கொலையில் இப்போது கைதான அரசியல் புள்ளிகள் மலர்கொடி, ஹரிகரன், சதீஷ், தலைமறைவாக இருக்கும் அஞ்சலை எந்த வகையில் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சுரேசின் காதல் மனைவியும் பெண் ரவுடியுமான அஞ்சலை பாஜவில் பொறுப்பு வகித்து வந்தவர். இவர் நேரடியாக சதி திட்டத்தில் ஈடுபட்டவர். இவரும் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள் ஆகியோரும் சேர்ந்து தான் இந்த கொலை திட்டத்தை போட்டுள்ளனர்

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !