உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் டைரக்டர் நெல்சன் மனைவி சிக்கியது இப்படி தான் | Armstrong case | Monisha Nelson

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் டைரக்டர் நெல்சன் மனைவி சிக்கியது இப்படி தான் | Armstrong case | Monisha Nelson

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிர வைத்தது. ஒரு கொலை வழக்கில் இவ்வளவு ட்விஸ்ட் அண்ட் டேர்ன் இருக்குமா என்று கற்பனையே பண்ண முடியாத அளவு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு. இதுவரை 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். எல்லோருமே வக்கீல், ரவுடி, அரசியல் புள்ளிகள் என் பின்புலம் கொண்டவர்கள். அதிலும் கொடுமை, திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், தமாகா என சர்வ கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளும் கைதானவர்கள் பட்டியலில் உள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாகவும், பிரபல ரவுடிகள் பலர் தங்கள் பகையை தீர்க்கவும் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. இதில் சென்னையை கலக்கிய பிரபல தாதா சம்பவ செந்தில் என்ற சம்போ செந்தில், ஆற்காடு சுரேஷின் ரைட் ஹேண்ட் சீசிங் ராஜா உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே பல திருப்பங்கள் நிறைந்த இந்த வழக்கில் திடுக்கிடும் புதிய திருப்பமாக பிரபல திரைப்பட இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவுக்கும் தொடர்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சம்போ செந்திலின் முக்கிய கூட்டாளிகளின் ஒருவன் மொட்டை கிருஷ்ணன். வக்கீலான கிருஷ்ணன் ரவுடியாகவும் வலம் வந்தான்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை