உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி | Armstrong | Armstrong Case

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி | Armstrong | Armstrong Case

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள், வக்கீல்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பொன்னை பாலு உட்பட 11 பேர் ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மற்றவர்கள் விசாரணைக்கு பிறகு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னை புதுவண்ணார பேட்டையை சேர்ந்த வக்கீல் ஹரிஹரனை போலீசார் கைது செய்து அதே சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் தான் கூலிப்படையினரை ஒருங்கிணைத்தது தெரியவந்தது.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை