உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் புஹாரியை காவலில் எடுத்து விசாரிக்கும் சிபிஐ! Armstrong |CBI |CBI Investig

சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் புஹாரியை காவலில் எடுத்து விசாரிக்கும் சிபிஐ! Armstrong |CBI |CBI Investig

பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக தலைவராக இருந்த, ஆம்ஸ்ட்ராங், 52, கடந்த, 2024ம் ஆண்டு, ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வந்தனர். இக்குழுவில், தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டராக இருந்த புஹாரி, மாதவரம் இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர். இவர்களில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான, ரவுடி திருவேங்கடம், 33 என்பவரை, புஹாரி, தற்காப்புக்காக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றார். அந்த இடத்தில், புஹாரியுடன் இன்ஸ்பெக்டர் சரவணனும் பணியில் இருந்தார். இவர்கள் தான், தற்போது, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, தொழில் அதிபர் அகில் குமார் என்பவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி, 45 லட்சம் ரூபாய் பறித்த குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர். இது தொடர்பான வழக்கில், பரங்கிமலை இன்ஸ்பெக்டர் புஹாரி கைதாகி சிறையில் உள்ளார். வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக விசாரித்த போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், இரண்டாவது குற்றவாளியான, ரவுடி சம்போ செந்தில் என்பவருடன், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. #ArmstrongCase #CBI #CBIInvestigation #SIT #TamilNaduPolice #ChennaiCrime #CrimeNews #BreakingNews #TamilNews #LatestNews #NewsUpdate #Investigation #PoliceNews #TamilNadu #CrimeUpdate

ஆக 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை