ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் திடுக் பின்னணி | Armstrong Death | BSP leader Armstrong | Arkadu Suresh case
சென்னை பெரம்பூரில் வீட்டு முன் பேசிக்கொண்டு இருந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரையே தீர்த்துக்கட்டிய சம்பவம், மொத்த சென்னையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 10 தனிப்படை அமைத்து இரவோடு இரவாக தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே சிலர் அண்ணாநகர் போலீசில் சரண் அடைந்தனர். சிலரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 8 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்கள் பொன்னை பாலு 39, செல்வராஜ் 48, ராமு வயது 38, சந்தோஷ் வயது 22, திருவேங்கடம் வயது 33, திருமலை வயது 45, மணிவண்ணன் வயது 25, அருள் வயது 33 என்பது தெரியவந்தது.