உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கக் கடலில் அர்னாப் புயல்: வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கக் கடலில் அர்னாப் புயல்: வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, மேலும் வலுவடைந்து இன்று புயலாக மாறியது. அர்னாப் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், கடந்த 6 மணி நேரமாக 15 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக அந்தமான் தீவுகளுக்கு வடமேற்கில் 590 கிமீ துாரத்திலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 650 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து 730 கிமீ, மசூலிப்பட்டினத்தில் இருந்து 830 கிமீ, பாபட்லாவில் இருந்து கிழக்கே 910 கிமீ தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று 26ம் தேதி நள்ளிரவு மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. நாளை 27ம் தேதி அதிதீவிர புயலாக வடமேற்கு திசை நோக்கி நகரும். 28ம் தேதி ஆந்திரா - ஏனாம் இடையே, பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே அதிதீவிர புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 - 125 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும். அவ்வப்போது காற்றின் வேகம் 140 கிமீ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிகப் பெரிய சேதம் உருவாக்கும் என அஞ்சப்படுவதால், அந்தந்த மாநில நிர்வாகங்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தற்போதைக்கு இந்த புயலால் சென்னை உட்பட தமிழக மாவட்டங்களுக்கு பெரிய பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. எனினும், தமிழகத்திலும் மழைக்கால முன்னெசெசரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். #ArnabCyclone #IMD #ChennaiRain #TNRain #HeavyRain #NEM #Monsoon

அக் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ