அதானி பேரத்தில் திமுக பெயர் வந்தது இப்படி தான் | Arrest warrant Adani | Adani vs US | Adani DMK row
இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அவருக்கு அமெரிக்க கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க முறைகேடு புகாரில் தமிழக அரசு பெயரும் பகிரங்கமாக அடிபட்டு இருப்பது கூடுதல் பரபரப்புக்கு காரணம். அதானி நிறுவன முறைகேடு புகாருக்கும், தமிழக அரசுக்கும் அப்படி என்ன சம்மந்தம் என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசிடம் SECI எனப்படும் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியா என்று ஒரு துறை உள்ளது. நாட்டின் தேவைக்கான மொத்த மின்சாரத்தையும் அணு மற்றும் அனல் மின் நிலையம் போன்றவற்றின் வழியாக எடுத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை உறுதி செய்வது இந்த துறையின் முக்கிய பணி. குறிப்பிட்ட அளவு சோலார் மின்சாரத்தை மாநில அரசுகள் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பது சோலார் எனர்ஜி கார்பரேஷன் விதிகளில் ஒன்று. இதை பயன்படுத்தி தான் அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க நிதித்துறையும், பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை துறையும் சேர்ந்து நியூயார்க் கிழக்கு கோர்ட்டில் குற்றச்சாட்டு வைத்தன. அதாவது, சோலார் எனர்ஜி கார்பரேஷனுக்கு 12 ஆயிரம் மெகாவாட் சோலர் மின்சாரம் தரும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் கைப்பற்றியது. ஆனால் விலை அதிகமாக இருப்பதாக சொல்லி பல மாநிலங்கள் சோலார் எனர்ஜி