முடியாது என்ற உலக நாடுகள் சாதித்து காட்டியது இந்தியா AI & Future Technology ModiMacron
டில்லியில் நடந்து வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்று பேசினார். ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர் பேசியது 10 ஆண்டுக்கு முன்பு மும்பை சாலையோர வியாபாரி வங்கி கணக்கு கூட தொடங்க முடியாத நிலையில் இருந்தார். இன்று அதே வியாபாரி தொலைபேசி மூலம் டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுகிறார். இது வெறும் தொழில் நுட்பத்தின் கதை அல்ல, ஒரு நாகரிகத்தின் கதை. இந்தியாவில் 140 கோடி மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்துக்குள் கொண்டுவர முடியாது என உலக நாடுகள் கூறின. ஆனால் அது தவறு என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. 140 கோடி மக்களுக்கு ஆதார் என்கிற டிஜிட்டல் அடையாளத்தை அளித்திருக்கிறது. மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்கிறது.