உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எச்பி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அஸ்வினி வைஸ்னவ் தகவல்! Ashwini Vaishnaw | HP | Padget |

எச்பி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அஸ்வினி வைஸ்னவ் தகவல்! Ashwini Vaishnaw | HP | Padget |

சென்னை ஒரகடத்தில் 3380 கோடி ரூபாய் மதிப்பில், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க எச்.பி மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் உள்நாட்டிலேயே தயாரிப்போம் திட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் கம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிக்க எச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. இது பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் முக்கியமான மைல் கல். இதன்மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதற்கட்டமாக இந்நிறுவனத்தில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். உற்பத்தி பெருகும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். எச்.பி. நிறுவனத்தில் தயாராகும் முதல் லேப்டாப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !