300 அடி ஆழத்தில் ஊசலாடும் உயிர்கள்: பரபரப்பு காட்சிகள் | Assam | Assam Coal Mine Slide
அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் 300 அடி ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக எலி வளை நுட்பம் மூலம் உள்ளூர் மக்கள் நிலக்கரி எடுக்கின்றனர் திங்களன்று நிலக்கரி எடுக்க சென்ற சிலர் சுரங்கத்தின் உள்ளே திடீரென புகுந்த வெள்ளத்தில் சிக்கினர். 300 அடி ஆழம் கொண்ட சுரங்கத்தில் 100 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கிறது. உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புபடை, சுரங்க நிபுணர்கள் அடங்கிய குழுக்களுடன் மீட்பு பணிகள் நடக்கிறது. சுரங்கத்தின் உள்ளே இருக்கும் தொழிலாளர்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் ஈடுபட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைக்கு உதவ தண்ணீரில் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடிய பயிற்சி பெற்ற கடற்படை நீச்சல் வீரர்களின் உதவி கேட்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான தகவல் படி சுரங்கத்தின் உள்ளே 3 பேர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.