உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காசிரங்கா வன விலங்கு பூங்கா விலங்குகள்! Assam flood | Kaziranga Natinal

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காசிரங்கா வன விலங்கு பூங்கா விலங்குகள்! Assam flood | Kaziranga Natinal

அசாமில் கரைபுரளும் வெள்ளம்! 46 பேர் பலி; 16 லட்சம் பேர் பாதிப்பு! வடக்கு கிழக்கு மாநிலமான அசாமில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிவதால், 29 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடும் மழை வெள்ளத்தால் அசாமில் புதன்கிழமை மட்டும் 8 பேர் இறந்தனர். இதையடுத்து வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் 515 முகாம்களில் 4 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. பிரசித்திபெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் 17 விலங்குகள் பலியாகியுள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 72 விலங்குகள் மீட்கப்பட்டு உள்ளன.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை