எனக்கு எப்படி இருந்திருக்கும்? காங்கிரசுக்கு எம்எல்ஏ மனைவி சூடு Assam |congress leader |arrested
அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பஜா ஆட்சி நடக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரீதம் சிங்Reetam Singh பாலியல் குற்றவாளிகள் 3 பேரின் படங்களை சமூக வலைதளத்தில் பதவிட்டு, இவர்களை போலவே, பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் பாஜ தலைவர்களுக்கும் தண்டனை கிடைக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அசாமில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏ மானவ் தேகா, முன்னாள் மாநில தலைவர் பாபேஷ் கலிதா, முன்னாள் அமைச்சர் ராஜேன் கோஹய் ஆகியோரை குறிப்பிட்டு இந்த கேள்வியை கேட்டு இருந்தார். இது தொடர்பாக, எம்எல்ஏ மானவ் தேகாவின் மனைவி ராஜஸ்ரீ, காங்கிரஸ் நிர்வாகி ரீதம் சிங் மீது போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ரீதம் கைது செய்யப்பட்டார். BNS சட்டத்தில் அவதூறு செய்தல் மற்றும் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளில் ரீதம் மீது வழக்கு பதியப்பட்டது.