உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைடன் கொடுத்த கிரீன் சிக்னல் ; அதிகரிக்கும் போர் பதற்றம்! | Atacms missiles | Ukraine | Joe Biden |

பைடன் கொடுத்த கிரீன் சிக்னல் ; அதிகரிக்கும் போர் பதற்றம்! | Atacms missiles | Ukraine | Joe Biden |

இரண்டரை ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராத ரஷ்யா - உக்ரைன் போர் புதிய வேகத்தை எட்டியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள், மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனிடம் ரஷ்யா இழந்த பகுதிகளை மீட்க, வட கொரிய ராணுவம் உதவிக்கு வந்துள்ளது. 12,000 வட கொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு வந்திறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை டிரம்ப் தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் போர் துவங்கியது முதலே பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் வழங்குவதிலும் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உதவிகள் செய்து வருகிறார். அமெரிக்கா வழங்கியுள்ள தொலைதுாரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்கள் ஒப்புதல் இன்றி பயன்படுத்த கூடாது என்றும் அவர் கூறி இருந்தார். இப்போது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதை அடுத்து, தொலைதுார இலக்குகளை தாக்கி அழிக்கும் (Atacms) பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் முக்கியமான கட்டமைப்புகளை ஊடுருவி தாக்க முடியும். இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி அளித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். பைடனின் கிரீன் சிக்னலால் போர் பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி