உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்து வந்த பாதை Athikkadavu Avinasi Paln| TN's first Pumping Station

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்து வந்த பாதை Athikkadavu Avinasi Paln| TN's first Pumping Station

கொங்கு மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். 1,916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேறியுள்ள இந்த திட்டத்தால், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கள் விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளன. தமிழகத்தின் இந்த முதல் நீரேற்று திட்டத்தின் மூலம், பவானி ஆற்றில் உபரியாக வெளியேறும் நீரை, காளிங்ராயன் அணைக்கட்டு பகுதியில் தேக்கி, ஆண்டுக்கு 1.50 டிஎம்சி தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். 6 வெவ்வேறு இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைத்து 106 கிமீக்கு தண்ணீர் பம்பிங் செய்து கொண்டு வரப்படுகிறது. பின், 1065 கிமீ நீளத்திற்கு நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதில் 5 இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை கடந்தும், 6 இடங்களில் நெடுஞ்சாலை கடந்தும் குழாய்கள் செல்கின்றன. மொத்தம் 1030 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளை செய்து முடித்த எல் அண் டி நிறுவனமே பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள உள்ளது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !