உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் செயலால் கருத்தை திரும்ப பெற்ற சுஷில் கேடியா: என்என்எஸ் கட்சியினர் 5 பேர் க

ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் செயலால் கருத்தை திரும்ப பெற்ற சுஷில் கேடியா: என்என்எஸ் கட்சியினர் 5 பேர் க

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிப்பவர் சுஷில் கேடியா. பிரபல நிதி முதலீட்டு ஆலோசகரான இவர், சொந்தமாக ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாடு, வெளிநாட்டு பங்கு சந்தை முதலீடு குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவர், பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலம். மும்பை புறநகர் பகுதியான பயந்தரில் மராத்தி மொழி பேச மறுத்த பேக்கரி கடைக்காரரை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கியதை கண்டித்து சுஷில் கேடியா சோசியல் மீடியாவில் கருத்து பதிவிட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேல் மும்பையில் வசித்த போதும், என்னால் மராத்தி மொழியை சரளமாக பேச முடியவில்லை. மராத்தியை வளர்ப்பதாக கூறி அராஜகத்தில் ஈடுபடும் இதுபோன்ற நபர்களால் தான் மராத்தியை கற்கும் எண்ணமே வரவில்லை. நான் அதை கற்கப்போவதும் இல்லை. என்ன செய்ய சொல்கிறீர்கள் என ராஜ் தாக்கரேவை டேக் செய்து கேட்டிருந்தார். மராத்தி மொழி, மண்ணின் மைந்தர்கள் கோஷத்தை கையில் எடுத்து அரசியல் செய்யும் எம்என்எஸ் கட்சியினருக்கு கேடியாவின் பதிவு ஆத்திரத்தை கிளப்பியது. மும்பை ஒர்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்ற எம்என்எஸ் தொண்டர்கள் சிலர், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த பணியாளர்கள், காவலாளிகள் தடுக்க முயன்றும் அவர்களை தள்ளிவிட்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுஷில் கேடியா, தனது கருத்து பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதை திரும்ப பெறுவதாகவும் ராஜ் தாக்கரேவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் வசித்தும், உள்ளூர்காரர்களை போல் என்னால் மராத்தியில் சரளமாக பேச முடிவதில்லை. ஏதேனும் ஓரிரு வார்த்தைகளை தவறாக பேசினாலும் யாராவது ஏதாவது தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் பேச முயல்வதே இல்லை. நான் ஏழு மொழிகளை சரளமாக பேச கற்றிருந்த போதும், இந்த தயக்கமும், பயமும் தான் மராத்தியை கற்க முடியாமல் போனதற்கு காரணம். நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என அப்படி சொல்லவில்லை. மராத்தி மொழிக்கு எதிராகவும் பேசவில்லை. அப்படி ஏதேனும் நடந்திருந்தால், மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதுடன் என் கருத்துக்களை திரும்ப பெறுகிறேன் என அந்த வீடியோவில் கேடியா பேசியுள்ளார். இதற்கிடையே சுஷில் கேடியாவின் அலுவலகத்தை சூறையாடிய எம்என்எஸ் தொண்டர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை தான் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே மீண்டும் இணைவதாக கூறினர். அதற்குள் மராத்தி மொழியை மையப்படுத்தி, மகாராஷ்டிராவில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஜூலை 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nagendhiran
ஜூலை 06, 2025 06:38

மொழியை வைத்து அரசியல்"செய்யும் அரசியல் கழிசடைகள்"அங்கும் இருக்கு போல? இங்கு சைமன்? சைக்கோ? தத்திகளை போல?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை