/ தினமலர் டிவி
/ பொது
/ மே.வங்க எதிர்க்கட்சி தலைவரின் கான்வாய் வாகனம் மீது தாக்குதல் Attack on Suvendu Adhikari | WB Politic
மே.வங்க எதிர்க்கட்சி தலைவரின் கான்வாய் வாகனம் மீது தாக்குதல் Attack on Suvendu Adhikari | WB Politic
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசாருக்கும் எதிர் கட்சியான பாஜ தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது வாடிக்கையாகிவிட்டது. இது தலைவர்கள் மீதான தாக்குதல் வரை வளர்ந்துவிட்டதால், மாநிலம் முழுதும் எப்போதும் பரபரப்பான சூழல் நிலவுவதாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் பாஜ எம்எல்ஏக்கள், தலைவர்கள் சிலர் மீது திரிணாமுல் காங்கிரசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் குறித்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட் விசாரித்தது. தாக்குதல் சம்பவம் குறித்து, கூச் பெஹார் எஸ்பியிடம் ஆவணங்களுடன் புகார் அளிக்கும் படி, பாஜவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆக 05, 2025