முகத்தை மறைத்து வந்து குண்டு வீசியவர்கள் யார்?
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய வளாகத்திற்குள், முகத்தை மறைத்தபடி பைக்கில் வந்த 2 பேர், திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். காவல் நிலைய வாசலில் விழுந்த குண்டு தீப்பற்றி உள்ளது. போலீசார் உடனே அணைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காவல் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களை சிப்காப் போலீசார் தேடி வருகின்றனர்.
பிப் 03, 2025