உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமியை கொடுமைப்படுத்திய சித்தி, தந்தையுடன் கைது | Aunt brutality | School girl died |Chennai

சிறுமியை கொடுமைப்படுத்திய சித்தி, தந்தையுடன் கைது | Aunt brutality | School girl died |Chennai

சென்னை ஓட்டேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத். இவரது முதல் மனைவி சங்கீதா 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். தம்பதியின் மூத்த மகள் ரித்திஷா, அவரது பெரியம்மா வீட்டிலும், 2வது மகள் நந்தினி, தந்தை அமர்நாத்துடனும் வளர்ந்து வந்தனர். இதற்கிடையே 2015ல் அமர்நாத் உஷா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். உஷா வீட்டிற்கு வந்த நாள் முதல் சிறுமி நந்தினியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நந்தினி மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாதபோது மாடியில் கூரை வீட்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நந்தினி தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது சித்தி உஷா அதிர்ச்சியில் கத்தினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நந்தினியை கீழே இறக்கி பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை