உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி | Australian Cricketers | Harassment

இந்தியா வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி | Australian Cricketers | Harassment

ஆஸி வீராங்கனைகளிடம் அத்துமீறல் நாட்டின் பெயரை கெடுத்த இளைஞன் காபி ஷாப்பில் நடந்தது என்ன? மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, லீக் சுற்றின் 26வது போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மத்திய பிரதேசத்தின் இந்துாரில் மோதியது. இதில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே உள்ள, காபி ஷாப்பிற்கு சில வீராங்கனைகள் சென்றனர். அப்போது அங்கே பைக்கில் வந்த நபர், இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையரை பின்தொடர்ந்து சென்றுள்ளான். ஒரு வீராங்கனையிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டதுடன், அணியின் பாதுகாப்பு அதிகாரியின் உதவியை நாடினர். அதற்குள் அந்த நபர் தப்பியோடியது தெரியவந்தது. இது குறித்து மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் உதவியுடன் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதன்படி, போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட இரண்டு வீராங்கனைகளிடம் உதவி போலீஸ் கமிஷனர் ஹிமானி மிஸ்ரா வாக்குமூலம் பெற்றார். தொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் வந்த நபர், ஆசாத் நகரைச் சேர்ந்த அகில் கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது நடவடிக்கையின் போது அகில் கான் தப்ப முயற்சித்த நிலையில், தடுக்கி விழுந்துப் அவனுக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர் =. இதுதவிர, ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் மத்திய பிரதேச அரசு ஆய்வு செய்து வருகிறது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி