உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேவை இல்லா கேபிள்களால் முழுவதும் எரிந்த மின்கம்பம்: ஆவடியில் அதிர்ச்சி | Avadi Fire Accident | High

தேவை இல்லா கேபிள்களால் முழுவதும் எரிந்த மின்கம்பம்: ஆவடியில் அதிர்ச்சி | Avadi Fire Accident | High

சென்னை ஆவடி அரசு மருத்துவமனை எதிரே உயர் அழுத்த மின் கம்பம் உள்ளது. இன்று காலை அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டது. மின் கம்பத்தில் கேபிள் வயர்கள் அதிக அளவில் சுற்றப்பட்டு இருந்ததால் அதில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் மின் கம்பம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த ஆவடி மின் வாரிய ஊழியர்கள் அந்த வழியாக மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கம்பத்தில் டிவி, இன்டர்நெட் கேபிள் உட்பட ஏராளமான வயர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பழுது அல்லது தீ விபத்து நடந்தால் பெரும் சிக்கலாகி விடுகிறது என்கின்றனர் மின்வாரிய ஊழியர்கள். #Avadi #Chennai #FireAccident #ElectricPoleFire #ChennaiNews #AvadiFireStation #TANGEDCO #PublicSafety #CableHazard #GovernmentHospital #ChennaiUpdates

செப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி