உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிரடி காளையை அடக்கி ஒரு லட்சம் தட்டிய வீரன் Avaniyapuram Jallikattu | Madurai Jallikattu | Ranjith

அதிரடி காளையை அடக்கி ஒரு லட்சம் தட்டிய வீரன் Avaniyapuram Jallikattu | Madurai Jallikattu | Ranjith

வாடா... வாடா... ஒரு லட்சம்... குத்து விட்ட காளை தட்டி தூக்கிய வீரன் மதுரையில் புகழ் பெற்ற அனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை ஆர்ப்பரிப்புடன் துவங்கியது. வாடி வாசலில் சீறி பாய்ந்த காளைகளை தீரமுடன் அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். திடீரென மெகா அறிவிப்பு ஒன்று வந்தது. தங்கள் காளையை அடக்கினால் ஒரு லட்சம் ரூபாயும், 2 தங்க காசும் தருவதாக சிவகங்கையை சேர்ந்த காளை உரிமையாளர்கள் முத்துக்காளை, ரவி மணிமாறன் பிரதர்ஸ் அறிவித்ததால் அரங்கமே பரபரக்க ஆரம்பித்தது. மறு கணம் இவர்களது காளை களத்தில் சீறி பாய்ந்து வந்தது. மற்ற காளைகளை விட ஆக்ரோஷமுடன் விளையாடியது. இருப்பினும் அவனியாபுரத்தை சேர்ந்த மாடு பிடி வீரர் ரஞ்சித் தீரமுடன் காளையை அடக்கி அசர வைத்தார்.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை