பாபா சித்திக் சம்பவம் பரபரப்பு வாக்குமூலம் | Baba Siddique | Salman Khan Zeeshan Siddique NCP lead
மகாராஷ்ட்ர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், மும்பையில் நேற்று முன்தினம் இரவு 3 மர்ம ஆசாமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பாபா சித்திக்கின் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் துரித கதியில் செயல்பட்டு, 3 பேரை கைது செய்தனர். பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்ட அரியானாவை சேர்ந்த குர்மைல் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் மற்றும் பிரவீன் லாங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாபா சித்திக்கை சுட்ட 3வது நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் கவுதம் மற்றும் அக்தர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.