எங்ககிட்ட தாங்க: அடையாளம் ரகசியமா இருக்கும் | Baby | Thanjavur Collector
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ளது ஆண்டிக்காடு. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடம் பின்னால் ஆண் குழந்தை சடலம் டப்பாவில் அடைக்கப்பட்டு புதரில் வீசப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட சேதுபாவாசத்திரம் போலீசார் பேராவூரணி அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை வீசி சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர். இதையடுத்து இதுபோன்ற குழந்தை மரணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்காக தொட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவ 18, 2024