பாட்டியை திசைத்திருப்பி மருத்துவமனையில் 'தில்லு' | baby abduct | Salem hospital baby
5 நாட்களே ஆன குழந்தையை கடத்தி சென்ற கில்லாடி லேடி! காட்டிக்கொடுத்த சிசிடிவி ஈரோடு அருகே பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தங்கதுரை-வெண்ணிலா தம்பதி. கடந்த 5ம் தேதி வெண்ணிலா 2வது பிரசவத்திற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. வெண்ணிலாவின் தாய் இந்திரா உடனிருந்து கவனித்து வந்தார். அவர்களுடன் ஒரு பெண் சகஜமாக பேசி பழகினார். குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருக்கிறது; டாக்டரை பார்க்க வேண்டும் எனக்கூறி, குழந்தையை தூக்கிக்கொண்டு, இந்திராவையும் அழைத்து சென்றார். இந்திரவை மருந்து வாங்கி வரச்சொல்லி அனுப்பிய அந்த பெண், குழந்தையை கடத்தி சென்றுள்ளார். எங்கு தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை. மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.