பெங்களூருவில் மோசமான வானிலையால் பயணிகள் தவிப்பு
கர்நாடகாவின் பெங்களுவில் பலத்த மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து பெங்களூருக்கு சென்ற விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் வானிலையே வட்டம் அடித்தன. ஐதராபாத், சீரடி மற்றும் துர்காப்பூரில் இருந்து பெங்களூருக்கு சென்ற விமானங்கள் தரை இறங்க முடியாததால், சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சென்னை ஏர்போர்ட்டில் அந்த விமானங்கள் இறங்கின. பயணிகள் விமானத்திலேயே உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி போன்றவை வழங்கப்பட்டன.
மார் 22, 2025