மகாவை உலுக்கிய பத்லாபூர் போராட்டத்தின் திடுக் பின்னணி | badlapur school case | badlapur protest
பள்ளியில் துடித்த பிஞ்சுகள் கொல்கத்தா போல் கொடூரம் மகாவில் வெடித்தது மக்கள் போராட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பத்லாபூர் பள்ளிக்கூடம் ஒன்றில் நர்சரி பள்ளியும் செயல்படுகிறது. அங்கு படிக்கும் 4 வயது குழந்தைகளுக்கு பள்ளியின் துப்புரவு பணியாளர் அக்சய் ஷிண்டே என்பவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் 12, 13ம் தேதிகளில் நடந்தது. 12ம் தேதி ஒரு சிறுமிக்கும் மறுநாள் இன்னொரு சிறுமிக்கும் கொடூரன் பாலியல் தொல்லை கொடுத்தான். அவர்கள் கழிவறை போகும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொடூர காரியத்தை செய்தான். கொடுமையை அனுபவித்த 2 பிஞ்சு குழந்தைகளும் மறுநாளில் இருந்து பள்ளிக்கூடம் போகமாட்டோம் என்று அடம்பிடித்தனர். பெற்றோருக்கு சந்தேகம் வந்தது. அவர்களிடம் துருவி துருவி விசாரித்த போது, அந்த பச்சிளம் பிஞ்சுகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்று முறையிட்டனர். போலீசிலும் புகார் செய்தனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இருப்பினும் கொடூரன் மீது போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். ஏற்கனவே கொல்கத்தா சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரமும் பத்லாபூரில் பூதாகரமானது. போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கொடூரன் அக்சய் ஷிண்டேவை கைது செய்தனர். அவனிடம் 3 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது. முதல்வர், வகுப்பு ஆசிரியை, 2 ஊழியர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவையும் மகாராஷ்டிரா அரசு நியமித்தது.