உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இருமொழி கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்: பாலகுருசாமி Balagurusamy | NEP

இருமொழி கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்: பாலகுருசாமி Balagurusamy | NEP

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையால் இளைஞர்கள் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்மொழி திட்டத்தை, மாநில அரசு ஏற்கவேண்டியது அவசியம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாலகுருசாமி கூறியதாவது: தமிழை தவிர, மற்றொரு இந்திய மொழியை கற்பதற்கு கடந்த 50 ஆண்டுகளாக வாய்ப்பு மறுத்து வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இருமொழிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட ஏராளமானோரில் நானும் ஒருவன். இருமொழிக் கொள்கை ஆதரிப்பால், ஏழை, கிராமப்புற, வசதியற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால், வசதியான நகர்புற மாணவர்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேரும் மாணவர்கள், விரும்பும் மொழியை கூடுதலாக கற்கும் சுதந்திரத்தை பெற்று விடுகின்றனர்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ