பலூன் திருவிழாவில் திடீர் பரபரப்பு | Balloon Festival | Pollachi
கோவை பொள்ளாச்சியில், 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது. தமிழக சுற்றுலாத்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோவை சாலையில் உள்ள ஆச்சிப்பட்டி மைதானத்தில் நடக்கும் திருவிழாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த 10க்கு மேற்பட்ட வெப்பக்காற்று ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன. முதல் நாளான இன்று விளம்பரதாரர்கள், முக்கியஸ்தர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. யானை வடிவிலான ராட்சத பலூனில் 5 பேர் வானத்தில் பறந்தனர். கேரளாவின் பாலக்காடு மாவட்டம், கன்னிமாரி முள்ளந்தோடு என்ற இடத்தின் மேல் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வயலில் விழுந்தது.
ஜன 14, 2025