இந்தியா, சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க எதிர்பார்ப்பு
பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி, BLA எனப்படும் பலூச் விடுதலை படை போராடி வருகிறது. இச்சூழலில், பாகிஸ்தானிடம் இருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாக, பலூச் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி மிர் யார் பலூச் அறிவித்தார். பல ஆண்டுகளாக பலூச் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை, மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சுதந்திரத்தை அறிவித்தார். பலூசிஸ்தான் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். இனி உலகம் அமைதியாக பார்த்து கொண்டு இருக்க கூடாது என மிர் யார் கூறியுள்ளார்.
மே 14, 2025