வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
பலுாசிஸ்தான் தனி நாடு போராட்டம் தீவிரம்: பாகிஸ்தானில் ஊரடங்கு
#BalochistanBlast #Curfew #Pakistan #BalochProtest பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி அந்த மாகாணத்தைச் சேர்ந்த பலூச் விடுதலைப் படை என்ற அமைப்பினர் பல நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அரசால் தங்கள் பகுதிக்கு எந்த பலனும் இல்லை எனக் கூறி வரும் அவர்கள், அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மாஸ்டுங் பகுதியில் நேற்று பல இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில், முக்கிய சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். குவெட்டா மற்றும் கராச்சியை இணைக்கும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினருக்கும், பலூச் விடுதலை படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. பாதுகாப்பு காரணம் கருதி, பலுாசிஸ்தானை ஒட்டிய பகுதிகள் மற்றும் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் நீடிக்கிறது. பலுாசிஸ்தானை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சிந்து மகாணத்திலும் பாக்., அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு குழுக்களாக செயல்பட்டு போராட்டத்தில் குதித்துள்ளது, பாக்., அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.