உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தடை பட்டியலில் 45 பயங்கரவாத அமைப்புகள் | MHA | 67 banned terrorist organizations

தடை பட்டியலில் 45 பயங்கரவாத அமைப்புகள் | MHA | 67 banned terrorist organizations

நாட்டில் 67 இயக்கங்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு! 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் திருத்தப்பட்டியலை மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது 67 அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கரே தொய்பா, ஜெய்ஷி முகமது, ஹர்கத் உல் முஜாகிதீன், ஐக்கிய காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, விடுதலை புலிகள் இயக்கம், தமிழ் தேசிய மீட்பு படை உட்பட 45 இயக்கங்களை பயங்கரவாத அமைப்புகளாக மத்திய அறிவித்துள்ளது. அதே போல், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, தேசிய மகளிர் முன்னணி, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்ளிட்ட 22 அமைப்புகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளின் பட்டியலில் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி