உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் இனி இருக்காது! Bangaladesh Hindu Issue | Myanmar | Arakan A

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் இனி இருக்காது! Bangaladesh Hindu Issue | Myanmar | Arakan A

வங்கதேசத்தில் நடந்த மாணவர் கிளர்ச்சியால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தற்போது வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அங்கு போராட்டம் நடத்திய இஸ்கான் முன்னாள் தலைவர் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவராத முடியாதபடி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவர் கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் வங்கதேசத்தில் கோயில்கள் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. புதிய அரசு அமைந்த பிறகும் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் இந்தியா அதற்கு கண்டனம் தெரிவித்தது. வங்கதேச விவகாரத்தில் இந்தியா நேரடியாக களமிறங்கி இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென குரல்கள் எழுந்தன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா, வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இந்தியா, வங்கதேசத்துக்கு அருகில் உள்ள மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வந்தது. அங்கு ராணுவத்துக்கும், உள்ளூர் கிளர்ச்சி குழுவான அராகன் ஆர்மிக்கும் இடையே பிரச்னை வெடித்தது. இதில் அராகன் ஆர்மி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதாவது மியான்மர் முழுவதும் இப்போது அராகன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அராகன் ஆர்மியை சேர்ந்தவர்கள் புத்த மதத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை