உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேஸ்திரி கதி என்னாச்சு மழைக்கு ஊடே மீட்பு பணி 6 stroyed building | Bangaluru |5 dead | heavy rain |

மேஸ்திரி கதி என்னாச்சு மழைக்கு ஊடே மீட்பு பணி 6 stroyed building | Bangaluru |5 dead | heavy rain |

பெங்களூருவில் 1 வாரமாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் கன மழை கொட்டியது. தொழிலாளர்கள் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்தனர். அப்போது அந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. உள்ளே இருந்த 20க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை, பெங்களூரு மாநகராட்சி மீட்பு பணியில் ஈடுபட்டன. 14 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். பீகாரை சேர்ந்த 5 தொழிலாளர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்களை வேலைக்கு அழைத்து வந்த மேஸ்திரி ஏழுமலையும் இடிபாடுகளில் சிக்கி இருக்க கூடும் என நம்பப்படுவதால் தேடுதல் பணி தொடர்கிறது. கட்டடத்தின் வெளியே வேலை செய்த தொழிலாளர்கள் உயிர்தப்பினர். 6 மாடி கட்டிடத்திற்கு சுற்றுச் சுவர் அமைக்க சுற்றிலும் பள்ளம் தோண்டி உள்ளனர். அதில் தேங்கி இருந்த மழைநீர் ஊறியதால் கட்டிடம் ஆட்டம் கண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ