ராணுவம்- மக்கள் மோதலில் ஒருவர் இறந்த பரிதாபம் | Bangladesh | Air force base attacked | coxs bazaar
விமானப்படை தளம் மீது கற்கள் வீசி தாக்கிய மக்கள்! ராணுவம் பதில் தாக்குதல் வங்கதேசத்தில் பரபரப்பு டிஸ்க்- ராணுவம்- மக்கள் மோதலில் ஒருவர் இறந்த பரிதாபம் Bangladesh |air force base| coxs bazaar |attacked |one killed| வங்க தேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் விமானப்படை தளம் உள்ளது. இதை விரிவுபடுத்தும் முயற்சியில் ராணுவம் இறங்கி இருக்கிறது. விமானப்படை தளத்தை ஒட்டி வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், இன்று, ராணுவத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விமானப்படை தளம் மீது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். விமானப்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஷிஹாப் கபீர் நஹீத் என்ற 25 வயது இளைஞர் கொல்லப்பட்டார். வன்முறையில் ஈடுபட்டவர்களை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கலைந்துபோக செய்தனர்.