/ தினமலர் டிவி
/ பொது
/ விடுதலை போராட்டம் முதல் இட ஒதுக்கீடு போராட்டம் வரை ஓர் அலசல்! Bangladesh | Riots | Students Protests
விடுதலை போராட்டம் முதல் இட ஒதுக்கீடு போராட்டம் வரை ஓர் அலசல்! Bangladesh | Riots | Students Protests
சுதந்திர போராட்டத்துக்கு பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவை 2 நாடுகளாக பிரித்தனர். தற்போதைய வங்கதேசம் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. அதை கிழக்கு பாகிஸ்தான் என்று அழைத்தனர். பஞ்சாபுக்கு பக்கத்தில் இருந்த பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. மதத்தால் மட்டுமே இரண்டு பகுதிகளும் ஒன்றாக இருந்தன. மற்றபடி இனம், மொழி, கலாசாரம் போன்றவற்றால் இரண்டு பகுதிகளும் பிரிந்தே கிடந்தன. மேற்கு பாகிஸ்தான் ஆதிக்கத்தில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வேற்றுமைகள் வளர்ந்ததன் விளைவாக இன்னொரு சுதந்திர போராட்டத்துக்கு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் விதை போட்டனர்.
ஜூலை 20, 2024