உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் வன்முறை!

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் வன்முறை!

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவும் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டம் பெகுன்பாரி பகுதியில் உள்ள கால்வாயில், நீல நிற டிரம் ஒன்று மிதந்து வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரம்மை மீட்டு சோதனை செய்தனர். டிரம்முக்குள் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடைத்தது. அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த கூட்டுறவு கிரெடிட் யூனியன் வழங்கிய டோக்கனை வைத்து, அவர் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் நகை வியாபாரி நிரஞ்சன் சந்திர சூத்ரதார் என்பது தெரிந்தது. அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது, நிரஞ்சன் கடந்த 20ம் தேதி முதல் காணாமல் போயிருந்ததாகவும், அவர் திரும்பி வருவார் என எதிர்பார்த்ததால் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிரஞ்சனின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு, உடலை டிரம்மில் அடைத்து கால்வாயில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நிரஞ்சனை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் இதற்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #வங்கதேசம் #Bangladesh #BangladeshNews #Hindu #HinduNews #HinduAttack #HinduCommunity #சிறுபான்மையினர் #Minority #NiranjanChandra #CrimeNews #CrimeNewsTamil #WorldNews #InternationalNews #TamilNews #TamilNewsToday #Dinamalar #DinamalarNews #BreakingNews #LatestNews #BangladeshCrime #Mymensingh #நகைவியாபாரி #NewsUpdate

செப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை