உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச கலவரத்தால் இந்தியா பதறுவது ஏன்? பரபரப்பு பின்னணி | Bangladesh Protest | India vs China | PAK

வங்கதேச கலவரத்தால் இந்தியா பதறுவது ஏன்? பரபரப்பு பின்னணி | Bangladesh Protest | India vs China | PAK

ங்கதேசத்தில் அரசை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இடைக்கால அரசு அமைப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள், ஆட்சி மாற்றம் ஆகியவை நம் நாட்டில் நேரடியாக பல தாக்கங்களை ஏற்படுத்தும். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், இரு தரப்பு உறவு, தேசிய பாதுகாப்பு என பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. பிரிவினைக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தன. பிரிவினையின்போது பாகிஸ்தான் தனி நாடாகச் சென்றது. அப்போது, அதனுடன் ஒட்டிக் கொண்டது தற்போதைய வங்கதேசம். கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட முட்டல் மோதலில், தனி நாடாக பிரிந்து சென்றது. இதற்காக 1971ல் நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா பெரும் உதவி புரிந்தது. அதன்பிறகே வங்கதேசம் தனி நாடாக உருவானது. நம் நாட்டுடன் ஒட்டியுள்ள வங்கதேசத்துடன் நீண்ட காலமாக நல்ல நட்பு இருந்து வந்தது. வங்கதேசம் உருவாக காரணமான வங்கத் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான், இந்தியாவுடன் நல்ல நட்பு வைத்திருந்தார். அவரது மகளான ஷேக் ஹசீனா, 2009ல் இருந்து தொடர்ந்து 4 முறை பிரதமரானார். தந்தை வழியில் அவரும் இந்தியாவுடனான நட்பைத் தொடர்ந்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசில், இரு தரப்பு உறவும் சிறப்பாகவே இருந்தது. ஷேக் ஹசீனாவை தன் சகோதரி என்று மோடி அன்பு பாராட்டினார். இருவருக்கும் இடையேயான அந்த நல்ல நட்பு, பாசப்பிணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவை வளப்படுத்தியது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை