வங்கதேசம் தலையில் அமெரிக்கா இறக்கிய அடுத்த இடி | Bangladesh | DOGE | US vs India | Modi US visit
அமெரிக்க அரசில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள எலான் மஸ்க் தலைமையில் அதிபர் டிரம்ப் அமைத்த DOGE எனப்படும் அரசு திறன் மேம்பாட்டு துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. உலகின் 100 நாடுகளுக்கும் மேல் பல ஆயிரம் கோடி ரூபாயை USAID (யுஎஸ் எய்ட்) எனப்படும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி நிதி உதவியாக வழங்கி வந்தது. எலான் மஸ்க் துறை இதை அதிரடியாக நிறுத்தியது. இஸ்ரேல், எகிப்து தவிர மற்ற நாடுகளுக்கு யுஎஸ் எய்ட் வழங்கி வந்த உதவியை அடியோடு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 100 நாடுகளுக்கான நிதி நிறுத்தப்பட்டது. அந்த வரிசையில் பல நாடுகளுக்கு தேர்தல், பாதுகாப்பு, இதர சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியையும் மஸ்க் பரிந்துரை பெயரில் இப்போது தடாலடியாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளார் டிரம்ப். இதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தலின் போது ஓட்டுப்போடும் வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைக்காக அமெரிக்கா வழங்கி வந்த 182 கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ளது.