இந்துக்கள் மீது தாக்குதல்: டாக்காவில் வெடித்தது போராட்டம் Bangladeshi| Hindus protest | Dhaka
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டம், உள்நாட்டு கலவரமாக மாறியது. அமைச்சர்கள் முதல் அப்பாவி மக்கள் வரை இதுவரை 570 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்பிடித்தார். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். மாணவர்கள் போராட்டக்குழு விரும்பியதுபோல, கடந்த செவ்வாயன்று இடைக்கால அரசு பொறுப்பேற்றது. தற்காலிக பிரதமராக நோபல் பரிசுபெற்ற முகமது யூனுஸ் பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார், வங்கதேசத்தில் மிகவிரைவில் இயல்புநிலை திரும்ப வேண்டும்; இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியில் விருப்பம் தெரிவித்திருந்தார்.