உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச இந்துக்களுக்கு எதிராக தொடரும் அராஜகம் Hindu teachers resignation forced to resign target B

வங்கதேச இந்துக்களுக்கு எதிராக தொடரும் அராஜகம் Hindu teachers resignation forced to resign target B

வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டம் கலவரமாக மாறியது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். 500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்துக்கள்குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் நொறுக்கப்பட்டன. இதைக் கண்டு இந்தியா கொந்தளித்தது. இந்துக்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவரும் டாக்காவில் உள்ள பிரபலமான இந்து கோயிலுக்கு சென்று, இந்து மத பிரதிநிதிகளுடன் பேசினார். எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள்தான்; இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், கள நிலவரம் வேறுவிதமாக சொன்னது. தொடர்ந்து இந்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை