பாரில் ரவுடிகள் அட்டகாசம் 5 பேரை தேடும் போலீஸ் | bar attack | Crime | chennai Police
சென்னை அடுத்த மாம்பலம் அருகே பொன்மார் சாலையில் மதுகடை பார் உள்ளது. 2 தினங்களுக்கு பாருக்குள் புகுந்த ரவுடிகள் 7 பேர், அங்கிருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். பார் ஊழியர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர். பட்டாக்கத்தியால் அவர்களை வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில், பார் ஊழியர்கள் ஒடிசாவை சேர்ந்த பரேஷ் குமார் மொஹந்தி, உமேஷ் குமார் மல்ஹோத்ரா ஆகியோர் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, பாரில் தாக்குதல் நடத்தியவர்களில் ரவுடி ஒருவன் தனியாக பாருக்கு வந்து ஓசியில் மது கேட்டு ஊழியர்களுடன் தகராறு செய்துள்ளான். ஊழியர்கள் அவனை அடித்தாக கூறப்படுகிறது. உடனே அந்த ரவுடி போன் செய்து தமது ஆட்களை வரவழைத்து பாரை சூறையாடி, ஊழியர்களை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.