உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர், திரையுலக பிரபலங்கள் இரங்கல் barathiraja| actor manoj barathiraja|

முதல்வர், திரையுலக பிரபலங்கள் இரங்கல் barathiraja| actor manoj barathiraja|

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். அவருக்கு வயது 48. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்த மனோஜ், சேத்துப்பட்டு வீட்டு ஓய்வில் இருந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மரணடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். 1999ல் வெளியான தாஜ்மஹால் படத்தில் மனோஜ் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். அப்படத்தில் ஈச்சி எலுமிச்சி.. என்ற பாடலை மேனோஜ் பாடி இருந்தார். கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் மகா நடிகன், சாதுரியன், உள்ளிட்ட பல படங்களில் மனோஜ் நடித்துள்ளார். கடைசியாக 2022ல் வெளியான விருமன் படத்தில் நடித்து இருந்தார். நடிப்பதற்கு வரும் முன் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். 2023ல் வெளியான மார்கழி திங்கள் படத்தை இயக்கினார்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை